சிலேத்தார் விமான நிலைய முனையம் டிசம்பரில் திறப்பு

1 mins read

புதுப்பொலிவு பெற்றுள்ள சிலேத்தார் விமான நிலையம் இவ்வாண்டு இறுதியில் அதன் பயணிகளை வரவேற்கவுள்ளது. கிட்டத்தட்ட $80 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 700,000 பயணிகளைக் கையாளக்கூடிய ஆற்றல் உண்டு. புதுப்பிக்கப்படுவதற்கு முன்னர், சிலேத்தார் விமான நிலையம் பெரும்பாலும் தனியார் விமானங்களுக்கு மட்டுமே சேவை வழங்கி வந்தது. இந்தப் புதிய முனையத்தில் நான்கு பயணப் பதிவு முகப்புகள், ஆறு குடிநுழைவுத் தடங்கள், இரு பாதுகாப்புப் பரிசோதனை கூடங்கள், நுழைவாயிலுக்கு வெளியே 200 பயணிகள் வரை அமர்ந்து இருக்கக்கூடிய காத்திருப்புப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறுகின்றன. மலேசியாவின் 'ஃபயர்ஃபிளை' விமானம் இவ்வாண்டு இறுதியிலிருந்து சிலேத்தார் விமான நிலையத்தில் தனது சேவையை வழங்கும். சிலேத்தார் விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 10,000 சதுர மீட்டர்.