நோயாளியை மானபங்கம் செய்த ஆண் தாதிக்கு சிறை

நோயாளியை மானபங்கம் செய்த ஆண் தாதிக்கு சிறை

1 mins read
de56d7a2-d60a-422d-b6b0-b42bf8446e41
-

மருத்துவர் மருந்தகத்திலிருந்து வெளியேறிய பிறகு, நிர்வாக வேலைகளைச் செய்வதற்காக அங்கிருந்த ஆண் தாதி ஒருவர் தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டு பெண்நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற் காக நேற்று அவ ருக்கு ஏழு மாதச் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. ஈசூனில் உள்ள ஒரு மருந் தகத்தில் தாதியாகப் பணிபுரிந்த 33 வயது முகம்மது ருசாய்னி ஜொஹாரி மருத்துவரைக் காண வந்த 28 வயது சீனப் பெண் மணியைப் பரிசோதிப்பதாகக் கூறி மானபங்கம் செய்தார். கடந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு மருந்தகத்திற்குத் தலைவலி, காது, தொண்டை வலி தொடர்பில் மருத்துவரைக் காண வந்த அந்தப் பெண் ணுடன் அவரு டைய கணவரும் இருந்தார். அவர்களிடம் மருத்துவர் வீட்டுக்குச் சென்ற செய்தியைக் கூறாமல் ருசாய்னி அப்பெண் ணைப் பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றார்.

நீதிமன்றத்தில் வெளியே காணப்பட்ட முகம்மது ருசாய்னி ஜொஹாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்