தீவு விரைவுச்சாலையில் நேற்று காலை நிகழ்ந்த இரு விபத்துகளின் விளைவாக பிடோக் நார்த் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவற்றில் ஒன்றில், காலாங்=பாய லேபார் விரைவுச்சாலை வெளிவாயிலுக்கு பிறகு இரு கார்களும் இரு டாக்சிகளும் மோதிக்கொண்டன. அந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் சிறிது நேரம் கழித்து கனரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகின.
தீவு விரைவுச் சாலையில் மின்னியல் சாலை கட்டண நுழைவாயிலுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஃபேஸ்புக்

