மலேசியாவில் நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாக அதிக அளவில் அறுவடையாகியுள்ள டுரியான் பழங்களை விற்கச் சிரமப்படும் சிங்கப்பூர்க் கடைக்காரர்கள் அவற்றை மலிவான விலையில் விற்கத் தொடங்கிவிட்டனர். 'மௌ ஷன் வாங்', 'ரெட் புரோன்', 'டி13' முதலிய உயர் ரக டுரியான் பழங்கள் தற்போது பாதி விலையில் விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலும் மழையும் சேர்ந்து வந்ததால் பழங்கள் பழுத்து விழுவது துரிதமாகிவிட்டது. அதோடு டுரியான் பழங்களின் எண்ணிக்கையும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகிவிட்டது. கடந்த ஆண்டு 14,000 டன்களுக்கும் மேலான டுரியான் பழங்களை மலேசியா பெரும்பாலும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ததாக அறியப்படுகிறது.
மலிவு விலையில் கிடைக்கும் உயர் ரக டுரியான் பழங்கள்
1 mins read
-

