வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை மே மாதத்தை விட ஜூன் மாத்தில் 0.3% வீழ்ச்சி கண்டு உள்ளதாக சொத்துச் சந்தை நிறுவனமான எஸ்ஆர்எக்ஸ் பிராப்பர்ட்டி நேற்று தகவல் வெளியிட்டது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் மறுவிற்பனை வீடுகளின் விலை இவ்வாண்டு 1.9% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருந்த மறுவிற்பனை விலை இப்போது 13.3% வீழ்ந்துள்ளதாகவும் தகவல் காட்டுகிறது. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் விற்பனையான 1,988 மறுவிற்பனை வீடுகள் மே மாதத்தில் விற்பனையான 1753 வீடுகளைவிட 13.4% அதிகரித்துள்ளதைத் திரட்டப்பட்ட தகவல்கள் காட்டுகின்றன.
மறுவிற்பனை வீடுகளின் விலை வீழ்ச்சி
1 mins read
-

