காலாங் வேவ் கடைத்தொகுதியில் இடம்பெற்றிருந்த என்டியுசி உணவு நிலையம் உட்பட பல வாடகைதாரர்கள் தங்களுடைய கடையை மூடிவிட்டனர். இந்த வரிசையில் மின்னியல் பொருட்களை விற்கும் ஹார்வி நார்மன் கடையும் அண்மையில் மூடப்பட்டது. "காலாங் வேவ் கடைத்தொகுதி நிர்வாகத்திடம் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிந்து விட்டது. இதனை நீட்டிக்க இனி நாங்கள் விரும்பவில்லை," என்று என்டியுசி ஃபுட்ஃபேர் நிறுவனத் தின் பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார்.
ஃபுட்ஃபேர் உணவகத்தின் கடைசி நாள் கடந்த மாதம் 24ஆம் தேதியாகும். ஆனால் அதற்கும் முன்னதாக வியாபாரத்தை அது நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் 'யூ கீ' குழுமம் நடத்தும் 'மை கம்போங்' எனும் ஹலால் உணவகம் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. மேலும் 'ஃபார்எவர் 21', 'ஹார்வி நார்மன்' உள்ளிட்ட நான்கு கடைகளும் அனுமதிக்கப் பட்ட காலத்திற்கு முன்னதாகவே இவ்வாரம் வியாபாரத்தை நிறுத்திக் கொண்டன. ஃபுட்ஃபேர் கடை மூடப் பட்டதால் மற்ற கடைகளின் வியா பாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபுட்ஃபேர் அருகே அமைந் துள்ள 'கேகட்ஸ்10' என்ற சிகை அலங்கார கடையின் உரிமையாளர், ஃபுட்ஃபேர் மூடப் பட்ட பிறகு ஒரு சில வாடிக்கை யாளர்கள் மட்டுமே தமது கடைக்கு வருவதாகத் தெரி வித்தார்.
காலாங் வேவ் கடைத் தொகுதிக்கு பொதுமக்கள் வருகை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

