இணையத்தில் நல்லிணக்கத்துக்குப் பாதகமான கருத்துகள்

இணையத்தில் நல்லிணக்கத்துக்குப் பாதகமான கருத்துகள்

1 mins read

இணையத்தில் பாதகமான கருத்து களைத் தெரிவித்ததற்காகவும் அத்துமீறி நுழைந்ததற்காகவும் இரண்டு மாதர்களுக்கு நேற்று 12 மாத கால நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இன, சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டி வருவதற்குப் பாதக மான கருத்துகளை ஃபேஸ்புக்கில் தெரிவித்ததற்காக 28 வயதுள்ள இரண்டு மாதர்களை 2017 அக் டோபரில் போலிஸ் விசாரிக்கத் தொடங்கியது.

அந்த இரண்டு மாதர்களும் சென்ற ஆண்டு அக்டோபரில் ஒரு கடைத்தொகுதியில் தீ மூண்டால் தப்பிச்செல்வதற்கான படிக்கட்டில் வழிபட்டுக்கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர்கள் வழி பாட்டை முடித்ததற்குப் பிறகு, அவர்களை அணுகி, பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு அறையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண் டார்கள்.

இருந்தாலும் அடுத்த நாளும் அந்த இரண்டு மாதர்களும் அதே படிக்கட்டில் வந்து வழிபட்டனர். மீண்டும் அவர்களுக்குப் பாது காப்பு அதிகாரிகள் அதே ஆலோ சனையைக் கூறினார்கள். அந்த மாதர்கள் பாதுகாப்பு மேற்பார்வை அதிகாரியைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பிறகு அந்த அதிகாரியை இனவெறியர் என்று அந்த மாதர்கள் குற்றம் சுமத்தினார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் ஃபேஸ்புக்கில் பல கருத் துகளைப் பதிவேற்றினார்கள். ஓர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றோர் இனத்தைச் சேர்ந்தவர் களைக் குறைத்து மதிப்பிடுவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.