குறைந்த வருவாய் உள்ள ஊழி யர்களின் சம்பளத்தை கூட்டுவதற் கான ஓர் அரசாங்க திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும். முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் பலன் அடைந்த ஊழியர்கள் பலரின் சம்பளம் கூடியிருப்பதால் அவர் கள் இந்தத் திட்டத்திற்கு இனி மேல் தகுதிபெறமாட்டார்கள். 'வேலை நலன் கூடுதல் வருமானம்' என்ற இந்தத் திட்டம் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் ஒரு தடவை மறுபரிசீலனை செய் யப்படுகிறது. மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தலைமையில் இடம்பெறும் இந்தப் பரிசீலனை முடிவுகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
இதனிடையே, இந்தத் திட்டம் தொடர்பில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த திரு ஸாக்கி, இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 2015ல் 389,000 ஆக இருந்தது என்றும் 2017ல் 366,000 பேராக குறைந்துவிட்டது என்றும் கூறினார். இந்தக் கூடுதல் வருவாய்த் திட்டத்தின் கீழ் தகுதிபெறு வோ ருக்கு ரொக்கமாகவும் மத்திய சேமநிதிச் சந்தாவாகவும் ஆண்டு தோறும் $3,600 வரை கிடைக் கிறது.
மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (வலது). படம் ஃபேஸ்புக்/ ஸாக்கி முகம்மது

