ஓஜி பகுதிவாரிக் கடையை நிறுவியவரின் பேரனான கெல்வின் லியு சின் சான் என்பவர் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையானார். அவர் ஒரு மாதின் கணவரை அலைக்கழித்த தாகக் கூறும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அந்த மாது, 2016ல் கெல்வினின் காதலியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. கெல்வின் மணமானவர். அரசாங்க ஊழியரான டெஸ்மண்ட் டே என்பவர் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மூலம் தன்னை கெல்வின் அலைக்கழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஓஜி பகுதிவாரிக் கடையை நிறுவிய திரு டே டி பெங் என்ற கோடீஸ்வரரின் புதல்வியான திருவாட்டி டே பிக் யுன் என்பவரின் மகன்தான் கெல்வின் லியு என்பது திரு டேக்கு தெரியவந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கெல்வின் லியு சின் சான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

