நாடாளுமன்றத்தில் இரு நாட்டு அதிவேக ரயில் திட்ட விவகாரம்

நாடாளுமன்றத்தில் இரு நாட்டு அதிவேக ரயில் திட்ட விவகாரம்

2 mins read

சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஜூலை 9ஆம் தேதி திங்கட்கிழமை கூடு கிறது. கோலாலம்பூருக்கும் சிங்கப் பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தின் நிலை பற்றி மன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி களை எழுப்புகிறார்கள். அந்த ரயில் திட்டத்தைக் கைவிட தன்னுடைய அரசாங்கம் திட்டமிடுவதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது கடந்த மே மாதம் தெரிவித்தார். இதன் தொடர்பில் அதிகாரபூர் வமான முறையில் சிங்கப்பூரிடம் தெரியப்படுத்தவில்லை என்று அவர் கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டது. இந்த விவகாரம் தொடர் பில் ஆறு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கேள்விகளைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

அந்த ரயில் திட்டத்திற்கு ஆயத்தமாவதற்காக இதுவரையில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டு இருக்கிறது என்பதையும் அந்தத் திட்டத்தை மலேசியா கைவிட்டால் சிங்கப்பூருக்கு ஆகி இருக்கும் செலவைத் திரும்பப்பெற முடியுமா என்பதையும் தெரிந்துகொள்ள உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். ஜூரோங் குழுத்தொகுதி உறுப் பினர் ஆங் வெய் நெங், பொத் தோங் பாசிர் உறுப்பினர் சீத்தோ பின், தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி செங் லி ஹுய் ஆகியோர் அவர்களில் அடங்குவர். அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் பிரீத்தம் சிங், தொகுதி யில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் கோ இருவரும் அந்த ரயில் திட்டம் ரத்தானால் அரசாங் கத்தின் வருவாயிலும் செலவினத் திலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறார்கள்.

அரசாங்கம் 2021க்கும் 2025க் கும் இடையில் ஜிஎஸ்டியை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. அதிவேக ரயில் திட்டம் கை விடப்படுமானால் அதன் காரண மாக ஜிஎஸ்டி முடிவு மீது எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெரியப்படுத்தும்படி பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரீத்தம் சிங் கேட்டு இருக் கிறார்.