அதிபர் சவால் நிதிக்கு $1 மில்லியன் கொடை

1 mins read

அதிபர் சவால் நிதிக்கு கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனம் $1 மில் லியன் நன்கொடை அளித்து இருக்கிறது. அந்த நிறுவனத்தின் 50வது ஆண்டுவிழாவின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட அந்த நன்கொடையை கெப்பல் நிறு வனத்தின் தலைவரான டாக்டர் லீ பூன் யாங்கிடமிருந்து அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பெற்றுக் கொண்டார். கெப்பல் நிறுவனத்தின் 50வது ஆண்டுவிழாவையொட்டி நேற்று நடந்த அறப்பணி ஓட்ட நிகழ்ச் சியில் அந்த நன்கொடை அளிக் கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங் கள் தொடர்ந்து நன்கொடைகளை வழங்கும் என்றும் நிதி ஆதரவுடன் தொண்டூழியம் மூலமாகவும் தங்களுடைய அறிவையும் ஆற்ற லையும் பகிர்ந்துகொண்டும் நிறு வனங்கள் தொடர்ந்து உதவி வரும் என்று அதிபர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதிபர் சவால் நிதியை 2000மாவது ஆண்டில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் தொடங்கி வைத்தார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து, வசதி குறைந்தோருக்கு உதவுவது அந்த நிதியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.