புக்கிட் பாஞ்சாங்கில் மாற்று பயண அட்டை இயந்திரங்கள்

புக்கிட் பாஞ்சாங்கில் மாற்று பயண அட்டை இயந்திரங்கள்

2 mins read
7fa92a7f-a93c-4798-8559-44ea09b97ede
-

புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் கள் பயண மாற்று சலுகை அட் டைகளை இப்போது எந்த நேரத் தில் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஹில்டன் மால் கடைத் தொகு திக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் இப்போது இரண்டு மின்னணு இயந்திரங்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் அவர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. இந்த இயந்திரங்களைப் பயன் படுத்தி குடியிருப்பாளர்கள் மாற்று சலுகை அட்டைகளை அதே இடத் தில் பெறலாம். அதற்காக அவர்கள் அத்தகைய அட்டைகளைப் பெறு வதற்கான அலுவலகங்களுக் குச் செல்ல வேண்டிய அவசியம் இனி மேல் இல்லை.

இந்த இயந்திரங்களில் செல வும் குறைவு. மூத்த குடிமக்களுக் கான சலுகை அட்டைக்கு $8க்கு பதில் $7 செலுத்தினால் போதும். மற்ற அட்டைகளுக்கு $13க்குப் பதிலாக $11ஐ செலுத்தி அவற் றைப் பெறலாம். இருந்தாலும் இந்த இயந்திரங் களில் புதிய சலுகை அட்டைகளைப் பெற பயணிகள் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக் கது. இத்தகைய புதிய அட்டை களைப் பெறவேண்டுமானால் ஒரு வர் தனது சொந்த தகவல்களைத் தெரியப்படுத்தவேண்டும். இதனை அவர்கள் அலுவலக முகப்பில் அல்லது இணையம் வழிதான் செய்யவேண்டும். புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தி பயணிகள், தங்கள் அட் டைகளில் பணத்தை ஏற்றிக்கொள் ளலாம். பயணச் சலுகை அனு மதியைப் பெறலாம். பயண பற்றுச் சீட்டுகளையும் பெறலாம்.

புக்கிட் பாஞ்சாங்கில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் பயணிகள் மாற்று சலுகை அட்டைகளை அதே இடத்தில் பெறலாம். இதற்காக அவர்கள் அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. படம்: சாவ் பாவ்