அலோசியஸ் டியோ என்பவர், தனது மலை ஏறும் சைக்கிளின் கைப்பிடி கம்பி சட்டபூர்வ அளவைவிட நீளமாக இருந்தது என்று சொல்லி நிலப் போக்கு வரத்து ஆணையம் தன் சைக் கிளை அண்மையில் பறிமுதல் செய்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்து இருக்கிறார். இது தமக்கு பெரும் வியப்பாக இருக்கிறது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரியில் உந்து நடமாட்டச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதன்படி நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் அத்தகைய சைக்கிள்களின் கைப்பிடி கம்பி 700 மி.மீ. அளவுக்குத்தான் இருக்கவேண்டும். அந்த ஆணையம் கொடுத் திருந்த கடிதம் ஒன்றின் நகலை யும் திரு டியோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார்.
"மார்சிலிங்கில் சாலை சந்திப்பு ஒன்றில் போக்குவரத்து விளக்குகளைக் கடந்து செல்ல முயன்ற நான், சாலை ஓரமாக இருக்கும் நடைபாதையில் போனேன். என்னை அதிகாரிகள் தடுத்தனர். அந்த நடைபாதையில் சைக்கிளோட்டிச் செல்வது குற் றம் என்று அதிகாரிகள் கூறினார் கள்," என அவர் தெரிவித்தார். சைக்கிளின் கைப்பிடி கம்பி 700 மி.மீயைவிட நீளமாக இருந் தால் நடைபாதையில் சைக் கிளோட்டி செல்லாதீர்கள் என்று அவர் மற்றவர்களை எச்சரித் துள்ளார். அந்த சைக்கிள் எடுத்துச் செல்லப்படுவதற்காக தான் $150 செலுத்தவேண்டி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உந்து நடமாட்டச் சட்டத்தின் கீழ், சைக்கிள்கள் போன்ற சொந்த நடமாட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் பல நிபந் தனைகளுக்கு உட்படவேண்டும்.
அவர்களுடைய வாகனத்தின் எடை 20 கிலோவைத் தாண்டக் கூடாது. அதன் கைப்பிடிக் கம்பியின் நீளம் 700 மி.மீயைத் தாண்டக்கூடாது. இப்படி இருந் தால்தான் அவர்கள் பொது பாதையில் போகமுடியும். நடைபாதைகளில் போகும் போது 15 கி.மீட்டக்கும் அதிக வேகத்தில் செல்லக்கூடாது. பூங்காக்களை இணைக்கும் பாதையில் உள்ள சைக்கிள் வழிகள், பொதுவான வழிகளில் செல்லும்போது வேகம் 25 கி.மீ. ஐத் தாண்டக்கூடாது. தவறிழைப் போருக்குக் கடுமையான தண் டனைகள் உண்டு.

