சிங்கப்பூரில் மனநல சுகாதாரப் பிரச்சினைகளுக்காக உதவி நாடிய இளையரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மும்முடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் 550 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1,580க்குச் சென்றது. இவர்களில் பாதிப்பேருக்கு மேல் மனநல சுகாதாரச் சோதனையை ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறச் சென்றனர். அவ்வாறு சோதனைக்குச் சென்றவர்களில் கிட்டத்தட்ட 76 விழுக்காட்டினரிடம் குறிப்பிடத்தக்க மனநல அழுத்தம் காணப்பட்டதாக மனநல சுகாதாரக் கழகத்தின் மக்கள்தொடர்பு அமைப்பான சாட் கூறியது. 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர் மீது கவனம் செலுத்தி வரும் இந்த அமைப்பு, மனநல சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்காவிடில் அது மனநோய்க்கு இட்டுச் செல்லக்கூடும் என்றது.
மனநல சுகாதார உதவி நாடிய இளையோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிப்பு
1 mins read

