கடன் வசூலிப்பதன் பேரில் பிற ரைத் திட்டமிட்டு அச்சுறுத்து வது, சட்டவிரோதமாகக் கூடு வது போன்ற குற்றங்கள் தொடர் பாக 22 வயது முதல் 49 வயது வரையிலான 13 நபர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று போலிஸ் நேற்று தெரிவித்தது. இந்த 13 நபர்களும் கடன் வாங்கியவர்களை மிரட்டித் தகாத சொற்களைக் கூறிக் கூச்சலிட் டதோடு கலவரம் ஏற்படக் காரண மாகவும் இருந்தனர் என்று நம்பப் படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள இரண்டு கடன் வசூலிக்கும் நிறுவனங் களில் இவர்கள் வேலை செய் கின்றனர். ஓர் அச்சுறுத்தல் சம்பவம் சென்ற ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்று ஜாலான் புசாரில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்தது. சுவன் சியாங் யுவென் கடல் உணவு உணவகத்துக்கு வெளியே குறைந்தது ஐந்து கடன் வசூ லிக்கும் நபர்கள் காணப்பட்டதாக அறியப்படுகிறது. 'பயப்பட வேண்டாம். கடன் வசூலிப்பு சட்டப்படி நடக்கிறது' என்னும் வாசகமும் ஒரு நிறு வனத்தின் பெயரும் கொண்ட ஒரு பெரிய பலகையைக் காட்டிய வண்ணம் நபர்கள் உணவகத்தில் ரகளை செய்தார்கள்.
உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோருக்குத் தொந் தரவு அளித்ததோடு அருகில் சாலையில் சென்ற சில வாகனங் களையும் அவர்கள் நிறுத்தியதாக அறியப்படுகிறது. திட்டமிட்டு அச்சுறுத்தும் குற் றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது $5000 அப ராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். சட்டவிரோதமாகக் கூடுவது தொடர்பான குற்றச்சாட்டு நிரூ பிக்கப்பட்டால் அபராதமோ இரண்டாண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

