நிலப் பற்றாக்குறை உள்ள சிங் கப்பூர் சூரியனில் இருந்து அதிக எரிசக்தியை உருவாக்க மேலும் ஒரு படி முன்னேறிச் செல்ல உள் ளது. சூரிய எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடு பட்டுள்ள அமைப்புகளில் ஒன்றான வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதுமையான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள கவனம் செலுத்தும் இடம் கடல். கடலோர நிலவரங்களுக்காக மிதவை சோலார் திட்டத்தை உருவாக்கவும் அது தொடர்பிலான ஆய்வை நடத்தவும் வரும் வாரத்தில் நிலவனப்பு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த இருப்பதாகக் கழகம் நேற்று தெரி வித்தது.
கடுமையான காற்று, கடலலை போன்ற கடற்சூழலை அந்த மிதவை சூரிய சக்தி ஏற்பாடு எந்த அளவுக்குத் தாக்குப் பிடித்து நீடிக்கும் என்பதை ஆய்வு உள் ளடக்கும் என்றும் கழகம் குறிப் பிட்டது. சிங்கப்பூரில் சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்தவும் அது தொடர்பான நடவடிக்கைகளிலும் கடந்த பத்தாண்டுகளாக கழகம் தீவிரம் காட்டி வந்ததாக அதன் தலைமை நிர்வாகி சியோங் கூன் ஹின் தெரிவித்தார். அந்த நடவடிக்கைகளுக்கு உதாரணமாக சிங்கப்பூரின் பல பகுதிகளில் 2,400 வீவக கட்டடங்களில் (புளோக்குகள்) சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள் ளன அல்லது பொருத்தப்பட்டு வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 5,500 வீவக கட் டடங்கள் அந்தத் தகடுகளைப் பொருத்தி இருக்கும் அல்லது பொருத்துவதற்கு அடையாளம் காணப்பட்டு இருக்கும். சூரியத் தகடுகள் மூலம் உரு வாக்கப்படும் எரிசக்தி பெரும் பாலும் மின்தூக்கிகள், தண்ணீர்க் குழாய்கள், பொதுப் பகுதிகளில் எரியும் விளக்குகள் போன்ற வற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

