தில்லுமுல்லு கடப்பிதழ்கள்: இலங்கையர்களுக்குச் சிறை

தில்லுமுல்லு கடப்பிதழ்கள்: இலங்கையர்களுக்குச் சிறை

2 mins read
a0e5d1c9-e419-494e-9975-a42a827729ac
-

போலியான பிரிட்டிஷ் கடப்பிதழ்களை (பாஸ்போர்ட்) பயன்படுத்தியதற்காக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களுக்கு இம்மாதம் 5ஆம் தேதி எட்டு மாதம் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டது. நாகமணி கங்காதரன், 46, கந்தசாமி நித்யானந்தன், 27, என்ற அந்த இரண்டு இலங்கை நபர்களையும் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் இடைவழிப் பயணிகள் பகுதியில் ஜூன் மாதம் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பிடித்தனர். இந்த ஆணையம் இந்த விவரங்களை நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நாகமணியும் கந்த சாமியும் இலங்கைக்கு வெளியே வேலை தேடினார்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி கேட்டு இலங்கை பயண முகவர் ஒருவரின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

அந்த முகவர், நாகமணியும் கந்தசாமியும் சிங்கப்பூர் வழியாக லண் டனுக்கு செல்ல ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கான கட்டணம் 330,000 இலங்கை ரூபாய் (S$2,80-0) முதல் 1 மில்லியன் ரூபாய் வரை இருந் தது. அந்த இருவரும் இலங்கை கடப்பிதழ்களை பயன்படுத்தி கொழும்புவிலிருந்து ஜூன் 18ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார்கள். நாகமணியும் கந்தசாமியும் அடுத்த நாளன்று இஷான் இஷ்மே இஷாக் என்ற 31 வயது மலேசிய ஆடவரைச் சந்தித்தார்கள். அந்த ஆடவர், அந்த இலங் கையர்களிடம் போலியான பிரிட் டிஷ் கடப்பிதழ்களை கொடுத் தார்.

அந்த கடப்பிதழ்களில் அந்த இலங்கை நபர்களின் புகைப் படங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் விவரங்கள் அவற்றில் இல்லை. பதிலாக வேறு சிலரின் விவரங்கள் அவற்றில் இருந்தன. சாங்கி விமானநிலையம் முனை யம் 1ல் நாகமணி, விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டை முகப்பில் பெற முயன்றபோது கந்தசாமி அவரைக் கவனித்தபடியே இருந்தார். நாகமணியின் அனுமதிச் சீட்டை பரிசோதித்த அதிகாரி, வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டார். அப்பொழுது பரபரப்பாக முகப்பைவிட்டு நாக மணி சென்றது தெரிந்தது.

நாகமணி (இடது), கந்தசாமி இருவரும் ஜூன் மாதம் சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் முனையம் 3ல் பிடிபட்டனர்.

படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்