மலேசியாவுடன் கூடிய 1962 தண்ணீர் உடன்பாட்டின் நிபந் தனைகளை சிங்கப்பூர் முற்றிலும் கடைப்பிடிக்கும் என்று வெளி யுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். மலேசியாவும் அந்த உடன் பாட்டை கடைப்பிடித்து நடக்கும் என்று சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக வும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டு நிபந்தனைகளில் தண்ணீர் விலையும் உள்ளடங் கும் என்றார் அவர். மலேசியாவுடன் கூடிய இரு தரப்பு உறவு தொடர்பான நாடாளு மன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், அந்த 1962 உடன்பாடு, சாதாரண ஓர் உடன்பாடு அல்ல என்றார். "1962 தண்ணீர் உடன்பாட் டுக்கு சிங்கப்பூரும் மலேசியாவும் 1965 பிரிவினை உடன்பாட்டில் உத்திரவாதம் அளித்துள்ளன. அந்த உடன்பாடு ஐநாவில் பதி யப்பட்டு இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "அந்த உடன்பாட்டை எப்படி மீறினாலும் அது பிரிவினை உடன்பாட்டை கேள்விக்கு உள் ளாக்குவதாக இருக்கும். இந்தப் பிரிவினை உடன்பாடே சிங்கப்பூர் இப்போது சுதந்திரமான, சுயாதி பத்திய நாடாக நிலைத்திருப்ப தற்கு அடிப்படையானது," என்று அமைச்சர் விளக்கினார்.
1962 நீர் உடன்பாட்டை சிங்கப்பூர் மதித்து நடக்கும்
1 mins read
-

