சிங்கப்பூரில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 200,000 அவசரநிலை அழைப்புகள் பதிவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அவசரநிலை அழைப்புகளை ஏற்று தேவையான உதவிகளை அனுப்பி வைக்கும் அதிகாரிகளின் வேலைப் பளுவைக் குறைக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் மேலும் நான்கு அரசாங்க அமைப்புகளும் செயற்கை நுண்ணறிவை நாடுகின்றன.
அழைப்பவர்கள் சிங்லிஷில் பேசினாலும் அதை அடையாளம் காணும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், சீனம், சிறிதளவு ஹொக்கியன், மலாய் ஆகிய மொழிகள் மட்டும் அடையாளம் காணப்படுகின்றன.

