'தீர்வு காண்பது உலக சமுதாயத்தின் பொறுப்பு'

'தீர்வு காண்பது உலக சமுதாயத்தின் பொறுப்பு'

1 mins read
9f185c68-1704-45fc-b897-ecfe3d75aa7f
-

வளரும் நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றுக்குத் தீர்வு காண உதவுவது உலகச் சமூகத்தின் பொறுப்பு என்றும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளில் வேலை தேடும் இளையர்களின் எண் ணிக்கை வெகுவாக உயர்ந்து வருவதாக அவர் கூறினார். இருக்கும் சவால்களிலேயே ஆகக் கடுமையான சவால்களை ஏழை நாடுகள் எதிர்கொள்ளக்கூடும் என்றார் திரு தர்மன்.

"உலகின் ஒரு பகுதியில் இந்தத் சவால்களை ஒழுங்காக எதிர்கொள்ளாவிட்டால் அவை மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும். தொற்று நோய், வலுக்கட்டாயக் குடிபெயர்தல், சண்டை, பாதுகாப் பின்மை போன்றவை உலகெங்கும் பரவக்கூடும்," என்றார் திரு தர்மன். உலக நகரங்கள் உச்சநிலை மாநாடு, சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம், 'கிளீன்என்வைரோ' உச்சநிலை மாநாடு சிங்கப்பூர் ஆகிய மூன்று நிகழ்வுகளின் திறப்பு விழா நேற்று ஒன்றாக நடத்தப்பட்டது.

மரினா பே சேண்ட்ஸில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் வளரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும் அவற் றுக்கான தீர்வுகளின் முக்கியத் துவம் பற்றியும் உரையாற்றினார்.

சிட்டி சொல்யூஷன்ஸ் சிங்கப்பூரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் (இடமிருந்து இரண்டாவது) பார்வையிடும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (இடமிருந்து மூன்றாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்