டிபிஇ-பிஐஇ மேம்பாலச் சாலைக்கான கட்டுமான ஒப்பந்தம் ரத்து

டிபிஇ-பிஐஇ மேம்பாலச் சாலைக்கான கட்டுமான ஒப்பந்தம் ரத்து

1 mins read

தெம்பனிஸ் விரைவுச்சாலை-தீவு விரைவுச்சாலை மேம்பாலச் சாலைக்கான கட்டுமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய நிலப் போக்குவரத்து ஆணையமும் உள்ளூர் கட்டுமான நிறுவனமான ஓர் கிம் பியாவ்வும் இணங்கியுள்ளன.

மேம்பாலச் சாலைக்கான கட்டுமானப் பணியை ஏற்று நடத்த ஓர் கிம் பியாவ் நிறுவனத்துக்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இம்மாதம் ஏலக் குத்தகை நடத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் அந்த மேம்பாலச் சாலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடிந்து விழுந்தது. அந்த விபத்தின் காரணமாகக் கட்டுமான ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். பத்து பேர் காயமுற்றனர்.