சட்டவிரோத புகைபிடித்தலை கண்டுபிடிக்க தீவெங்கும் கேமராக்கள்

சட்டவிரோத புகைபிடித்தலை கண்டுபிடிக்க தீவெங்கும் கேமராக்கள்

1 mins read

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைபிடிப்போரைக் கண்டுபிடிக்க தீவெங்கும் கேமராக்களைப் பொருத்த தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களும் குப்பை வீசுபவர்களும் இந்தத் திட்டம் வாயிலாக அதிகாரிகளிடம் சிக்குவர்.

புகைபிடிக்க தடை செய்யப்பட்ட சில இடங்களில் பலர் தொடர்ந்து புகைபிடிக்கின்றனர். இத்தகைய இடங்களில் புகைபிடிப்பவர்களின் படத்தை கேமரா பதிவு செய்யும். அதே நேரத்தில் அவர்கள் புகைபிடிக்கும் தேதியும் நேரமும் பதிவு செய்யப்படும். பொருத்தப்படும் கேமராக்கள் பதிவு செய்யும் படங்களை அழிக்கமுடியாது. கேமராக்கள் கட்டடக் கூரைகள், பொதுத் தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடங்கள் போன்ற இடங்களில் மறைவாக வைக்கப்படும்.