கேர்ஷீல்டு லைஃப்' காப்புறு தித் திட்டத்துக்கும் மேலானது என்றும் அது சிங்கப்பூரின் சமுதாயப் பாதுகாப்பு வலையின் முக்கியமான அங்கம் என்றும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார். நீண்ட கால உடற்குறையுடையோருக் கான இந்தக் காப்புறுதி பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கியபோது திரு கான் இதனைக் குறிப்பிட்டார். கடுமையான உடற்குறை உடைய சிங்கப்பூர் குடியிருப் பாளர்கள் 2020ம் ஆண்டில் இருந்து தங்களது நீண்டகால பராமரிப்புத் தேவைகளுக்கு மெடிசேவ் நிதியைப் பயன்படுத் திக்கொள்ளலாம். புதிய 'எல் டர்ஃபண்ட்' நிதியும் அத்தகை யோருக்கு ஆதரவு அளிக்கும். 2018-07-11 06:00:00 +0800
'சமுதாயப் பாதுகாப்பு வலையில் கேர்ஷீல்டு லைஃப் திட்டம் முக்கிய அங்கம் வகிக்கும்'
1 mins read

