கொண்டோமினிய வீடுகளின் விற்பனை குறைந்தது

கொண்டோமினிய வீடுகளின் விற்பனை குறைந்தது

1 mins read
0c9961db-f4f7-4b56-89c9-912894cd74e6
-

கடந்த ஜூன் மாதம் தரை வீடுகள் அல்லாத மறுவிற்பனை வீட்டின் விலைகள் முன்னைய மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் இதே காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை குறைந்தது. சொத்து சந்தை இணையத் தளமான எஸ்ஆர்எக்ஸ் நேற்று வெளியிட்ட மதிப்பீடுகள் இதனை தெரிவித்தன. ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் கடந்த ஜூன் மாதத்தில் வீட்டின் விலைகள் 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.6 விழுக்காடு அதிகரித்திருந்தன. ஜூனில் மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண் ணிக்கை 25.5 விழுக்காடு குறைந்தது. கடந்த மே மாதம் விற்கப்பட்ட 1,514 வீடுகளுடன் ஒப்பிடுகையில் ஜூனில் 1,128 வீடுகள் விற்பனையாயின.