இந்தோனீசியாவின் கொடி ஏற்றப்பட்ட பயணிகள் படகு ஒன்று சிங்கப்பூர் கடற்பகுதிக்கு அருகே தரைதட்டியது. ஆனால் அதிலிருந்த 45 பயணிகள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். புலாவ் தெக்கோங் முனையில் ஸ்ரீகண்டி99 எனும் அந்தப் படகு பாறையில் மோதி தரை தட்டிய தாக திங்கள் இரவு 11.42 மணி யளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. ஜோகூரில் உள்ள பெங்க ராங்கில் நிறுத்தப்பட்டுள்ள பனா மாவில் பதிவு செய்யப்பட்ட மற் றொரு பயணிகள் படகுக்குச் சென்று திரும்பியபோது 'ஸ்ரீகண்டி99' விபத்துக் குள்ளானது.
சிங்கப்பூருக்கு அருகே தரை தட்டிய படகு; 45 பேர் தப்பினர்
1 mins read
-

