திருமணங்கள் அதிகரிப்பு; கால்பங்கு கலப்பு மணம்

திருமணங்கள் அதிகரிப்பு; கால்பங்கு கலப்பு மணம்

1 mins read
7ecb298c-cb65-4bb1-9658-d777ea81873b
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் திருமணங்கள் அதி கரித்துள்ளன. கடந்த ஆண்டில் 28,212 திருமணங்கள் நடந்துள்ள தாக சிங்கப்பூர் புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக் கிறது. அதே சமயத்தில் மொத்தம் நடைபெற்ற 28,212 திருமணங் களில் கால்பங்கு கலப்புத் திரு மணங்களாகும். அதாவது கடந்த ஆண்டில் இரு வெவ்வேறு இனங்களுக்கு இடையே நடைபெற்ற கலப்புத் திரு மணங்களின் விகிதம் 22.1 விழுக் காடாகும். 2007ல் இது 16.4 விழுக்காடாக இருந்தது. இதைக்கருத்தில் கொண்டால் 2007ஆம் ஆண்டிலிருந்து கலப்புத் திருமணம் ஏறுமுகமாகவே இருந் துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 2016ஆம் ஆண்டில் நடந்த 27,971 மொத்த திருமணங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் திருமணங்கள் 0.9 விழுக்காடு அதிகரித்துள்ளன.