தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெமாசெக் சாதனை; மொத்த மதிப்பு $308 பில்லியனுக்கு அதிகரிப்பு

1 mins read
7f0c4904-dae3-4506-bfaf-c69d8f9482d5
-

சிங்கப்பூர் அரசாங்கத்தின் முத லீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்சின் மொத்த மதிப்பு கடந்த ஆண்டின் 275 பில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இவ் வாண்டில் சாதனை அளவாக 308 பில்லியன் வெள்ளிக்கு அதிகரித் துள்ளது. 2018 மார்ச் 31ஆம் தேதி முடியும் நிதியாண்டின் ஆண்டு அறிக்கையை நேற்று தெமாசெக் வெளியிட்டபோது இந்த விவ ரங்கள் தெரியவந்தன. ஓராண்டுக்கு முன்புடன் ஒப் பிடுகையில் தெமாசெக்கின் ஒட்டு மொத்த மதிப்பு 13 விழுக்காடு கூடியது. அண்மையில் வலுவான லாபத்தை ஈட்டியிருப்பதாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறு வனங்கள் அறிவித்துள்ள வேளை யில் தெமாசெக்கின் அறிக்கை வெளியாகியுள்ளது. டிபிஎஸ் குழுமம் ஹோல்டிங்சின் சந்தை மூலதன மதிப்பு 44 விழுக் காடு அதிகரித்தது. 'பிங் ஆன்' காப்புறுதி நிறு வனத்தின் மூலதன மதிப்பும் 91 விழுக்காடு வளர்ச்சி அடைந் துள்ளது. அலிபாபா குழுமம் ஹோல்டிங்சின் சந்தை மூலதனம் 73% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் தெமாசெக்கின் மொத்த மதிப்பும் சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது.