அனைவரையும் உள்ளடக்கும் கல்வி

அனைவரையும் உள்ளடக்கும் கல்வி

1 mins read

உடற்குறைபாடுள்ள அல்லது சிறப்புத் தேவைகளுள்ள பிள்ளைகளையும் பெரும்பாலா னோர் செல்லும் பள்ளிகளில் சேர்க்க அதிகம் செய்ய வேண் டும் என்றார் வழக்கறிஞரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சியா யொங் யொங். நரம்பு, தசைநார் கோளாறு உள்ள அவர், பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியில் படித்தபோது சக மாணவர்களால் தான் பயனடைந்ததாக நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். தமது இளமைக் காலத்தை நினைவுகூர்ந்தபோது அவருக்குத் தொண்டை அடைத்தது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டத்திற்கான தேவை குறித்து அவர் பேசினார். அதனால், பிள்ளைகள் படித்து, விளையாடி, ஒன்றாக வளர அதிக வாய்ப்புகளை உருவாக்க முடிவதுடன் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கலாம் என்றார் அவர்.