நாடாளுமன்றச் செய்தி: அமைச்சர் இந்திராணி ராஜா: வெற்றிக்குப் பல பாதைகள்

நாடாளுமன்றச் செய்தி: அமைச்சர் இந்திராணி ராஜா: வெற்றிக்குப் பல பாதைகள்

1 mins read

வெற்றிக்கு ஒரே ஒரு குறுகலான பாதை மட்டுமே இருக்கிறது என்ற நம்பிக்கையே சிங்கப்பூர் மாணவர்கள் எதிர்நோக்கும் மன உளைச்சலுக்கான முக்கிய காரணம். ஆனால் மன உளைச்சலைக் குறைக்கவும் அதிக ஆதரவான சூழலை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டாலும், மனப்போக்கை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்றும், அதற்குச் சற்று காலமாகும் என்றும் கல்வி இரண்டாம் அமைச் சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். எதிர்காலக் கல்வியின் தொடர்பில் திரு லூயிஸ் இங் (நீ சூன் குழுத்தொகுதி), திரு டெரல் டேவிட் (அங் மோ கியோ குழுத்தொகுதி) உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமன நாடாளுமன்ற உறப்பினர் கொக் ஹெங் லியுனும் மன உளைச்சல், மதிப்பெண்கள் மீதான அளவுக்கதிக வலியுறுத்தல் பற்றி எழுப்பிய கவலைகள் தொடர்பாக அவர் பதிலளித்தார்.

கால ஓட்டத்தோடு எழுந்த சவால்களுக்கு ஏற்ப கல்வித் துறை மாறி வருவதாகக் குமாரி இந்திராணி கூறினார்.