நாடாளுமன்றச் செய்தி: வசதிகுறைந்த, சிறப்புத் தேவை மாணவர்களுக்கு ஆதரவு

நாடாளுமன்றச் செய்தி: வசதிகுறைந்த, சிறப்புத் தேவை மாணவர்களுக்கு ஆதரவு

1 mins read

'நம் எதிர்காலத்துக்கான கல்வி' என்னும் தலைப்பை ஒட்டிய விவாதம் நேற்று நாடாளுமன்றத் தில் பேசப்பட்டதில் கற்றல் சிரமங் களுடைய மாணவர் களுக்கு ஆதரவு அளிக்க, பள்ளிகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் கூறினார். சிறப்புத் தேவைப் பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது சிரமங்கள் எதிர்நோக்காமல் இருக்கத் திட்டம் ஒன்று 2019ஆம் ஆண்டுக்குள் 15 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இது தற்போதைய 12ஐ காட்டிலும் அதிகம். 2015இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தி னால் 150 மாணவர்கள் இதுவரை பலனடைந்துள்ளார்கள்.

அதேபோல் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் களுக்கும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் சமீப ஆண்டுகளில் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் ஃபைஷல் கூறினார். இதற்குச் சான்றாக வழங்கப் படும் நிதி உதவி, கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் குறைந்த வருமானம் கொண்ட சிங்கப்பூர்க் குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்குவது ஆகியவற்றைச் சுட்டினார் இணை பேராசிரியர் ஃபைஷல்.