சிங்கப்பூரில் பொதுச் சாலைகளில் இப்போது 14 தானியங்கி வாகனங் கள் சோதித்துப் பார்க்கப்படுகின் றன. சாலைகளைப் பயன்படுத்து வோருக்கு எந்த ஆபத்தும் ஏற் படக்கூடாது என்பதற்காக போக்கு வரத்து அவ்வளவாக இல்லாத சாலைகளில் அவற்றின் சோதனை ஓட்டங்கள் இடம்பெறுகின்றன.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தஞ்சோங் பகார் குழுத்தொகுதி உறுப்பினரான மெல்வின் யோங் கிற்குப் பதிலளித்து பேசிய அமைச் சர், சாலைகளைப் பயன்படுத்து வோரின் பாதுகாப்பை உறுதிப் படுத்த இத்தகைய வாகனங்களுக் கான சோதனைகள் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்றார். இத்தகைய வாகனங்கள் மேலும் சிக்கலான சாலை சூழ் நிலைகளைச் சந்திக்கும் ஆற் றலைக் கொண்டிருக்கும் என்பது இந்தச் சோதனைகளில் தெரிய வரும்போது அடுத்தகட்ட சோதனை முயற்சிகள் இடம்பெறும்.

