முக்கிய சாலைச் சந்திப்பை அடைத்துக்கொண்டு நின்ற பேருந்தைத் தள்ளி ஓரமாக நகர்த்திய வெளிநாட்டு ஊழியர் களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. லோவர் டெல்டா சாலையும் கம் போங் பாரு சாலையும் சந்திக்கும் முக்கிய பாதையில் பேருந்து நின்றுவிட்டது. புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் செய்வதறியாது திகைத்துப் போனார். உதவிக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் பலனாக அருகிலிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஓடி வந்தனர். உடனே அவர்கள் பேருந்தை பின்பக்கத்திலிருந்து தள்ளி ஓரமாக நிறுத்த உதவினர். இதனால் ஹார்பர் ஃபிரண்ட் நோக்கிச் செல்லும் பாதை, போக்குவரத்து நெரிசலிலிருந்து மீண்டது. இதற்கிடையே ஊழியர்கள் உதவி செய்வதை காணொளியாகப் படம் பிடித்த ஸியே ஹென்செம் என்பவர், ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார். இதனைக் கண்ட பலர் பாராட்டி கருத்துகளைப் பதிவு செய்திருந்த னர்.
பேருந்தைத் தள்ளி ஓரமாக நிறுத்த உதவிய ஊழியர்கள். படம்: ஃபேஸ்புக் (ஸியே ஹான்செம்).

