தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேராதவர்களுக்குப் புதிய திட்டம்

1 mins read
81492a17-d4ee-4dc2-8d77-866f9c9a5237
-

சிங்கப்பூர் அரசாங்கம், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேராத வர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி தகவல் தொழில் நுட்பத் துறையின் பின்னணியில் லாதவர்களும் தகவல் தொழில் நுட்பத் துறையின் நிபுணத்துவ ஆற்றலைப் பெறலாம். 'மின்னிலக்க நிபுணத்துவத் திட்டம்' என்பது இத்திட்டத்தின் பெயர். "குறிப்பாக நிபுணர்கள், மேலா ளர்கள், நிர்வாகிகள், தொழில் நுட்பர்கள் ஆகியோரை நோக்க மாகக் கொண்டு திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு, வர்த்தகத் தரவு மற்றும் புள்ளி விவரங்கள், உள்ளடக்கத்தை உரு வாக்குதல் ஆகியவற்றை பயிற்சி உள்ளடக்கியிருக்கும். மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப் பூர் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், எதிர் காலச் சவால்களைச் சந்திக்கும் வகையில் ஊழியர் அணியை உரு வாக்கும் முயற்சியின் முதல் படி என்று திட்டத்தைப் பற்றி குறிப்பிட் டார். "எதிர்காலப் பணிகள் இன்ன மும் முழு வடிவம் பெறவில்லை. அது எப்படி இருக்கும் என்பதோ அதற்கு எப்படித் தயாராக வேண் டும் என்பதோ யாருக்கும் தெரி யாது. "இருந்தாலும் போட்டித் திறனுக்குத் தயாராக இருப்பது அவசியம்," என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரிவித் தார்.