லிட்டில் இந்தியா ரெக்ஸ் திரையரங்கு மூடப்பட்டது

1 mins read
2209dcf9-8706-4152-a1a3-97d3d2bc50cd
-

எஸ். வெங்கடேஷ்வரன்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் திரைப்பட ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த 'ரெக்ஸ் சினிமாஸ்' திரையரங்கம் தனது கதவுகளை மூடிவிட்டது. 'நார்த்-=சௌத் கொரிடோர்' எனும் வடக்கு=தெற்கு விரைவுச்சாலைப் பணிகளுக்காக மூடப்பட்டு வரும் பல கட்டடங்களுள் மெக்கென்ஸி சாலை யில் அமைந்திருக்கும் ரெக்ஸ் திரை யரங்கமும் ஒன்று. இதே காரணத்துக்காக அருகில் உள்ள எலிசன் கட்டடமும் மூடப்பட்டு அங்கிருந்த கடைக்காரர்களிடமிருந்து கடைகளையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ரெக்ஸ் திரையரங்கம் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தனது செயல் பாட்டை நிறுத்திக்கொண்டதாகக் கூறி னார் ரெக்ஸ் சினிமா தலைமை நிர் வாகி செந்தில்குமார், 35. ஆகக் கடைசிக் காட்சியாக ஜூன் 21ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஜெயம் ரவி நடித்த 'டிக்...டிக்...டிக்' திரை படம் காண்பிக்கப்பட்டது. அடுத்த பத்து நாட்களுக்குள், அதாவது ஜூன் 30ஆம் தேதி திரையரங்கக் கட்டடம் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டதாக திரு செந்தில் கூறினார்.

லிட்டில் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திரைப்பட ரசிகர் களின் ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வந்த ரெக்ஸ் திரையரங்கம் மீண்டும் அதே இடத்தில் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறி. படம்: வான் பாவ்