கொரிய தீபகற்பத்தில் அமைதியும் நிலைப்பாடும் நிலைத்திருக்க ஆசியான் தொடர்ந்து ஆக்ககர மான முறையில் உதவ முடியும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே=இன் தெரிவித்து இருக்கிறார். அனைத்துலக சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினர் என்ற தனது பணியை வடகொரியா செய்துமுடிக்க தேவையான வாய்ப் புகளை உருவாக்கித் தரவேண்டிய தேவை இருக்கிறது என்றும் திரு மூன் குறிப்பிட்டார்.
தென்கொரிய அதிபர் சிங்கப் பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தப் பய ணத்தின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று அவர் ஆர்ச்சர்ட் ஹோட் டலில் சிங்கப்பூர் விரிவுரை தொடரை ஒட்டி உரையாற்றினார். வடகொரியா மனப்பூர்வமான முறையில் அணுஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில் ஆசியானின் பல்வேறு கலந்துரையாடல் அமைப்பு களில் பங்கெடுத்துக்கொள்ளும்படி அந்த நாட்டுக்கு அழைப்பு விடுக் கப்படும் என்று தான் நம்புவதாக தென்கொரிய அதிபர் குறிப்பிட்டார்.

