லோயாங் அவென்யூவில் இருக்கும் அடுக்குமாடி வீடு ஒன்றின் சன்னல்களை, ஒரு கூரையில் நின்றபடி ஒரு பெண் துடைத்துக்கொண்டு இருந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது, அந்தப் பெண் ஒரு பணிப்பெண் என்பது தெரியவந்தது. அவர் முதல்மாடி கூரையில் நின்றபடி சன்னல்களைத் துடைத்துக்கொண்டு இருந்ததைப் படங்கள் காட்டின. லோயாங் வில்லாஸ் பகுதியில் திங்கட்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரம் பற்றி புலன்விசாரணை நடந்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
சாய்வாக இருக்கும் ஒரு கூரையில் நின்றபடி சன்னல்களைத் துடைக்கும் பொருளுடன் பணிப்பெண் காணப்பட்டார். படம்: ஸ்டோம்ப்

