ப. பாலசுப்பிரமணியம்
தாய்லாந்தில் மழை வெள்ளம் சூழ்ந்த ஒரு குகையில் சிக்கிக்கொண்ட 13 பேர் வெற்றிகர மான முறையில் காப்பாற்றப்பட்ட சம்பவம், சமூக உணர்வுக்கு ஊக்கம் தரும் ஒன்று என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்து இருக்கிறார். அந்தச் சம்பவம் மனிதாபிமான முறையில் ஒட்டுமொத்த சமூகமே ஒன்றுகூடி உதவிக் கரம் நீட்டுவதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து குகை மீட்பு நடவடிக்கை மூலம் சிங்கப்பூர் பலவற்றையும் கற்றுக் கொள்ளமுடியும் என்றும் திரு தர்மன் தெரி வித்தார்.
சக மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுடைய வாழ்வும் மேம்பட வேண்டும் என்ற சமூக உணர்வைத் தொண்டூழியம் வழியாக வெளிக்காட்ட மக்கள் முன்வரவேண்டும் என்று பொருளி யல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங் கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் வலியுறுத்தினார். மக்கள் கழக அடித்தள மன்றத்தில் நேற்று நடந்த சிண்டா பாராட்டு நிகழ்ச்சியில் திரு தர்மன் உரையாற்றினார். அப்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். சிண்டாவின் பல்வேறு திட்டங்களுக்குப் பங்களித்ததற்காக மொத்தம் 133 சமூகப் பங்காளிகளும் பள்ளிகளும் தொண்டூழியர் களும் நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பிக்கப் பட்டனர்.
சிண்டாவின் திட்டங்களை வழிநடத்து வதற்குச் சிண்டாவின் தொண்டூழியர்களின் பங்கு இன்றியமையாதது என்றும் அவர்கள் அர்த்தமுள்ள முறையில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பங்களிக்கும் வகையில் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன என்றும் சிண்டாவின் அறங்காவலர் குழுத் தலைவருமான திரு தர்மன் கூறினார். சிண்டா நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச் சருமான இந்திராணி ராஜாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய குமாரி இந்திராணி, தொண்டூழிய முயற்சிகள் சமூக அளவிலும் அமைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து ஊக்கு விக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

