பிரான்ஸ்-சிங்கப்பூர் உறவுக்கு மறுவுறுதி

பிரான்ஸ்-சிங்கப்பூர் உறவுக்கு மறுவுறுதி

1 mins read
96aa0c28-ba81-4c55-bf5d-feae9cc532a8
-

பிரஞ்சு ராணுவ இசைக்குழு பிரஞ்சு இசைக்கூறு ஒன்றை வாசிக்க அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் அங்கு இரு ஆசிய நாடுகளாக சிங்கப்பூர், ஜப்பானிய கொடிகள் அணிவகுத் துச் சென்றன. முதல் முறையாக இவ்வாண்டு பிரஞ்சு தேசின தினக் கொண்டாட் டங்களில் சிங்கப்பூர் பங்கேற்றது. பிரஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் அழைப்பின்பேரில் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேக்குப் பதி லாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ வந்தி ருந்தார். ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக திரு அபே வரவில்லை.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் லீ சியன் லூங் (இடது) பிரஞ்சு செனட் சபையின் தலைவர் ஜெரார்ட் லாஷருடனும் (வலது) மற்றொரு விருந்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். படம்: ஏஎஃப்பி