தேசிய சேவையைத் தள்ளிப்போட அனுமதி இல்லை

தேசிய சேவையைத் தள்ளிப்போட அனுமதி இல்லை

1 mins read
8c4c34d0-0cba-4bab-aee2-e5b53d2844d8
-

சிங்கப்பூர் காற்பந்தாட்ட வீரர் பென் டேவிஸ், முழுநேர தேசிய சேவையைத் தள்ளிப்போட அவர் செய்திருந்த விண்ணப்பத்தைத் தற்காப்பு அமைச்சு நிராகரித்து உள்ளது. இதனால் தேசிய சேவையில் சேர அவர் டிசம்பரில் சிங்கப்பூர் திரும்ப வேண்டியுள்ளது. 17 வயது டேவிஸ், இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் (இபிஎல்) பிரபல ஃபுல்ஹம் காற்பந்துக் குழுவில் விளையாட அதனுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்தி ட்டார். ஃபுல்ஹம் குழு சென்ற ஆண்டு ஜூலையில் அவரை ஈராண்டு உபகாரச் சம்பளத்துட னான பயிற்சிக்குத் தெரிவு செய்தது. இந்நிலையில், டேவிஸின் விண்ணப்பம், நீண்டகாலத்துக்கு முழுநேர தேசிய சேவையைத் தள்ளிப்போடுவதற்கான தகுதி யைப் பெறவில்லை என்று அமைச்சு கூறியது.