சுப்ரா சுரேஷ்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகை மாற்ற வேண்டும்

1 mins read
72d57ea2-3d5c-4505-96e5-31a30388350c
-

உயர்கல்வித் துறைக்கு எனப் பொது வான சவால்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு கல்வி நிலையத்திற்கும் தனிப்பட்ட சவால்கள் இருப்பதாகவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் (என்டியு) தலைவர் சுப்ரா சுரேஷ் தெரிவித்திருக்கிறார். 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி தழுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசியல் சூழல் எப்படி இருந்தாலும், ஆராய்ச்சி களும் இளையர்களும் பல்வேறு நாடு களுக்குச் செல்வது, உயர் கல்விக்கான பொதுவான சவால் என்று அவர் கூறினா ர்.

ஆயினும், மக்களை வசப் படுத்தும் இயக்கங்கள் உலகில் அதி கரித்துவர, மாணவர்கள் நாடுகளுக்கு இடையே சென்று கல்வி கற்பதற்குப் புதிய தடைகள் ஏற்படலாம் என்று பேராசிரியர் சுரேஷ் கூறினார். ஆய்வுகளுக்கான நிதி வழங்கலில் உலகளவிலான மாற்றங்களும் ஏற் படலாம் என்று பேராசிரியர் சுரேஷ் தெரிவித்தார். தாம் முன்னர் தலைமை தாங்கி இருந்த அமெரிக்க தேசிய அறிவியல் அறநிறுவனம், பல்லாண்டுகளாக உலகில் அறிவியல் ஆய்வுகளுக்கான ஆகப் பெரிய நிதி வழங்கும் நிறுவன மாக இருந்ததாக அவர் கூறினார்.