'பிரான்ஸ்=சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது'

'பிரான்ஸ்=சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது'

1 mins read
1586e9d7-3b95-42d4-87cb-5b6bd96df128
-

பிரான்சும் சிங்கப்பூரும் தொடர்ந்து வலுவான உறவைக் கொண்டு இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். பிரான்சுக்கு மூன்று நாள் அதி காரத்துவப் பயணம் மேற்கொண்ட அவர், சிங்கப்பூர் திரும்புகையில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நேற்று இதனைக் குறிப்பிட்டார். பிரான்சின் விருந்தோம்பலுக் காக பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் திரு லீ. திரு மெக்ரோனை அடுத்த ஆண்டு சிங்கப்பூருக்கு வரவேற்க தாம் ஆவலுடன் காத்திருப்பதாக திரு லீ குறிப்பிட்டார். இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசி யா னுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நடைமுறையை மறுபடியும் தொடங் குவதற்கு அந்த இரண்டு தரப்புக ளும் இணங்கி இருக்கின்றன.

பிரதமர் லீ நேற்று முன்தினம் இதனை அறிவித்தார். ஆசியான்- ஐரோப் பிய ஒன்றிய உறவு களுக் கான ஆசியான் ஒருங் கிணைப் பாளர் பொறுப்பை வரும் ஆகஸ்ட் முதல் சிங்கப்பூர் ஏற்க இருக்கிறது. இந்த இரு தரப்புக்கும் இடை யில் உடன்பாடுகளை நிறை வேற்றும் ஆற்றல் உள்ள துறைக ளை அடையாளம் காண்பதற்கு உதவும் ஓர் ஏற்பாட்டை தோற்று விக்கலாம் என்று சிங்கப்பூர் நம்புவ தாகவும் பிரதமர் லீ தெரிவித்தார்.

பாரிசில் சிங்கப்பூரின் 53வது தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 300 சிங்கப்பூரர்களைப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்