நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது: இயக்குநர் தகவல்

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது: இயக்குநர் தகவல்

1 mins read

தேனி: நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதன் திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றார். மேலும் இத்திட்டத்துக்காக அணுக்கழிவு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் விவேக் உறுதி அளித்தார்.

"நியூட்ரினோ திட்டத்துக்காக மலையைக் குடைந்து, சுரங்கப்பாதை அமைத்து, அதற்கும் கீழ் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இதனால் நில அதிர்வுகள் ஏற்படாது. சுரங்கம் அமைப்பதற்கு மொத்தம் 340 டன் வெடிமருந்து பயன்படுத்தப்படும். எனினும் இவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்த மாட்டோம்," என்றார் விவேக். நியூட்ரினோ திட்டத்துக்காக தினமும் 3.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது 300 குடும்பங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மட்டுமே என்றார். நியூட்ரினோ திட்டத்துக்கு ரூ.1,583 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் விவேக் தத்தார் மேலும் தெரிவித்தார்.