பல்வேறு பிரச்சினைகள் பற்றி சிங்கப்பூரர் களின் கருத்துகளையும் யோசனைகளை யும் செவிமடுக்கும் நோக்கத்தில் அரசாங் கம் தொடர் கலந்துரையாடல்களைத் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரர்கள் காப்பி கடைகளிலும் வீவக வெற்றுத் தளங்களிலும் அக்கம்பக்க கடைகளிலும் மேலும் பல அமைச்சர்களை விரைவில் காணமுடியும். கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று ஜூரோங் சென்ட்ரலில் அமைச்சர் நிலை சமூக வருகை முடிவில் இந்தத் திட்டங்களை அறிவித்தார். அவருடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.
இதற்கு முன்னதாக ஒரு தொகுதி உலாவில் ஓர் அமைச்சர் மட்டுமே கலந்து கொள்ளும் நிலை இதுவரையில் இருந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நேரத்தில் மூன்று அமைச்சர்கள், அமைச்சர்நிலை சமூக வருகை அளித்தனர். இந்த ஏற்பாடு, பெரிய அளவிலான முயற்சியின் ஓர் அங்கம் என்று திரு ஓங் வர்ணித்தார். சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளைப் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்காக கடந்த மே மாதம் பெரிய அளவிலான முயற்சிகள் பற்றி அறிவிக்கப்பட்டது.
திருவாட்டி டெங் ஆ மோய் என்ற மாது, தன்னுடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி நேற்று அமைச்சர் நிலை வருகை அளித்த (இடமிருந்து) தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், கல்வி அமைச்சர் ஓங் யி காங் இருவரிடத்திலும் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

