தகவல் பாதுகாப்புத் துறையில் பயிற்சி பெற விரும்பும் ஊழியர் களும் வர்த்தகங்களும் அதற் கான பயிற்சியையும் நிபுணத்துவ சான்றிதழையும் பெற புதிய கூட்டு முயற்சி ஒன்றை நாடலாம். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் திறனாளர் பயிற்சி அங்கமான 'எஸ்எம்இயூ அகா டமி', சிங்கப்பூரைத் தளம் கொண் டுள்ள தகவல் பாதுகாப்பு நிறுவ னம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' இன்டர்எக்டிவ்வுடன் இணைந்து புதிய தகவல் பாதுகாப்பு உன்னதக் கட் டமைப்பை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளது. சிறிய நடுத்தர நிறு வனங்கள், தங்களது சொந்த தக வல் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான வளங் களைப் பெறுவதற்கு அந்தக் கட் டமைப்பு துணைபுரியும். தகவல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வகுப்புகளை அந்தக் கட்டமைப்பு வழங்கும். தகவல் தொடர்பான சட்டம், தனிப்பட்ட தகவல், நடைமுறை பயிற்சி உள் ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
தகவல் பாதுகாப்புத் துறையில் புதிய கூட்டு முயற்சி
1 mins read

