சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆரோக்கிய பாலர் பள்ளி நற்சான் றளிப்பு முறையின்படி 1,145 பாலர் பள்ளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் உடல் பரு மன் விகிதத்தைச் சமாளிக்க, பிள் ளைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவ தன் அவசியத்தை உணர வேண் டும். பருமனான பிள்ளைகள் பரு மனான பெரியவர்களாவதற்கு கூடுதல் வாய்ப்புள்ளதோடு '2வது வகை' நீரழிவு போன்ற கடும் வியாதிகளும் ஏற்படலாம். இவ்வாறு 2015ல் பாலர் பள்ளி களில் 11 விழுக்காடு மட்டுமே சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் சான்றளிக்கப்பட்டன என்றார் வாரியத்தின் பள்ளி சுகாதார, மக்கள் தொடர்பு பிரிவின் இயக்குநர் திரு அலெக்ஸ் ஃபன். இது தற்போது சிங்கப்பூரிலுள்ள 1,850 பாலர் பள்ளிகளில் 62 விழுக்காடாக வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங் மோ கியோவில் உள்ள மக்கள் செயல் கட்சி அறநிறுவனத்தின் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி மாணவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன் அப்பள்ளியில் ஆரோக்கிய உணவுகளும் மாணவர்களுக்குப் பரிமாறப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

