சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் இந்த மாதம் சொத்துச் சந்தையின் வேகத்தைத் மட்டுப்படுத்துவதற் காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கை களைக் குறைகூறியுள்ளது. அந்த நடவடிக்கைகள் சிங்கப் பூர் சொத்துச் சந்தைக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்ப தாக சங்கத்தின் (ரேடாஸ்) தலைவ ர் ஆகஸ்ட்டின் டான் கூறினார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் சிங்கப் பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாள ர் கள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த சொத்துச் சந்தை ஆய்வரங்கு ஒன்றில் அவர் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சுமார் 36,030 தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் அண்மையில் அறி வித்த இந்த நடவடிக்கைகள் வீடு வாங்குவதற்கான செலவை அதி கரித்துள்ளன என திரு டான் கூறினார். இதனால் வெளிநாட்டினர், முத லீட்டாளர்கள் போன்ற தரப்பின ரிடமிருந்து தேவை குறைந்துவிட்டதா கவும் அவர் சொன்னார். சொத்து வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரியும் சொத்து மதிப்பு, அதற்கான கடன் விகிதம் கடுமையாக்கப்பட்டதும் வீடு வாங்குவதற்கான விலையை அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

