எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி குறைந்தது

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி குறைந்தது

1 mins read

வர்த்தகப் போர் நெருக்கடிகள் அதிகரித்து வருவதும் மின்னணு வியல் பொருட்களின் விற்பனை குறைந்து வருவதும் கடந்த மாதம் எண்ணெய் சாரா உள் நாட்டு ஏற்றுமதியில் மந்த நிலை யைத் தோற்றுவித்துள்ளன. இதனால் இவ்வாண்டின் இரண்டாம் பாதி சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த மாதம் 1.1 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டதாக நேற்று வெளியிடப்பட்ட அதிகார பூர்வத் தகவல்கள் காட்டின. இந்த வளர்ச்சி மே மாதத்தில் பதிவான 15.5 விழுக்காட்டைவிட மிகவும் குறைவு. மின்னணுவியல் சாரா ஏற்று மதியின் வளர்ச்சி கடந்த மாதம் 4.6 விழுக்காடாக பதிவா னது. அதற்கு முந்தைய மாதத்தில் இந்தப் பெரும் வளர்ச்சி 26.2 விழுக்காட்டை எட்டியது.