சிங்கப்பூர் பதின்மவயது காற்பந்து வீரர் பென் டேவிஸ் தேசிய சேவை யைத் தள்ளிப்போட அனுமதிப்பது தேசிய சேவையில் சேர ஏற்கெனவே பதிந்தவர்களுக்கு நியாயமானதாக இருக்காது என்று தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் ஃபுல்ஹம் காற்பந்துக் குழுவில் ஒப்பந்தம் செய்திருப்பதைக் கார ணங்காட்டி தேசிய சேவையைத் தள்ளிப்போட அனுமதிக்குமாறு 17 வயது டேவிஸ் முன்னதாக விண் ணப்பித்து இருந்தார்.
அதைத் தற்காப்பு அமைச்சு நிராகரித்தது. டேவிஸின் விண்ணப்பம், நீண்டகாலத்துக்கு முழுநேர தேசிய சேவையைத் தள்ளிப்போடுவதற் கான தகுதியைப் பெறவில்லை என்று அமைச்சு கூறியிருந்தது. ஃபுல்ஹம் காற்பந்துக் குழு வுடன் டேவிஸ் செய்துகொண்ட ஒப்பந்தம் அவரின் தனிப்பட்ட நாட்டம் என்று அமைச்சு விளக் கியது. தேசிய சேவையில் சேரஇ ருக்கும் மற்றவர்களின் தனிப் பட்ட நாட்டத்தைவிட இது வேறுப ட்ட தல்ல என தேசிய சேவை அதிகாரிகளுக்கு தற்காப்பு அமைச்சு நேற்று அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டது.

