தமிழ் மொழி வளர்க்க 'ஆகா! இன்பமான கற்றல் பயணம்'

தமிழ் மொழி வளர்க்க 'ஆகா! இன்பமான கற்றல் பயணம்'

1 mins read
166e1b36-f936-4c13-9f5f-280b723bb600
-

எஸ்.வெங்கடேஷ்வரன்

தமிழ் மொழியை ஆர்வத்து- டன் சிறார்கள் கற்கவேண் டும் என்ற நோக்கத்தில் நேற்று 'ஆகா! இன்பமான கற்றல் பயணம்' என்ற நிகழ்ச்சியைத் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினராக செம் பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்து கொண்டார். சிங்கப்பூர் ரிவர் சஃபாரி விலங்கியல் தோட்- டத் தில் நடந்த இந்நிகழ்ச்சி யில் ஐந்து முதல் ஆறு வயதுக்கு உட் பட்ட ஏறக் குறைய 40 பாலர் பள்ளி மாணவர்கள் கலந்துகொண் டனர்.

"சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியைப் பயன் படுத்துவதற்கான ஆர்வத்தை வளர்க்கவேண்டும். பொது வாக தமிழைக் கற்றுக் கொடுப் பது அவ்வளவு சுல பம் அல்ல. குறைந்த மக்கள் தொகையின் கார ணத் தால் தமிழைக் கற்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

சிங்கப்பூர் ரிவர் சஃபாரி விலங்கியல் தோட்டத்தில் கற்றல் பயணத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக்குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் (இடக்கோடி). 'ஆகா! இன்பமான கற்றல் பயணம்' என்ற இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகமும் ஏற்பாடு செய்திருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்