உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகில் மோதிய 2 வாகனங்கள்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகில் மோதிய 2 வாகனங்கள்

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் கடல்பாலப் பகுதியில் நேற்று காலை இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் சிங்கப்பூரில் பதிவான கார் ஒன்று மலேசியா கார் மீது மோதியது. ஒரு காரின் பின்பகுதி பெரும் சேதமடைந்திருந்ததாகவும் அந்தக் காரின் பின் கண்ணாடி நொறுங்கித் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது. விபத்தில் சிக்கிய 39 வயது ஆடவரும் 44 வயது பெண்ணும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது சுயநினைவுடன் இருந்தார்கள். காலை 6.55 மணிக்கு விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.